தமிழ்நாடு

சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: எவ்வளவு தெரியுமா?

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 24 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. தேர்தல் காரணமாகத்தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக உயரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 காசுகள் குறைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.95 ரூபாய் என்றும், டீசல் விலை 86.25 ரூபாய் என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் குறையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் 70 ரூபாய்க்கு குறைவாக வரும் என்றும் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பால் தான் கிட்டத்தட்ட 90 ரூபாய்க்கு பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version