தமிழ்நாடு

15 நாட்களுக்கு பின் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: தேர்தலுக்கு பின் உயருமா?

Published

on

பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது கூடுதல் மகிழ்ச்சி அடைந்து உள்ளது. ஆனால் இந்த மகிழ்ச்சி தற்காலிகமானது என்றும் ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த சில வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் உள்ளது என்பதும் ஒரு சில நாட்களில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 15 நாள்களாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை நீடித்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 15 காசுகளும் டீசல் விலை 13 காசுகளும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 15 நாட்களுக்குப் பின் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசுகள் குறைந்து ரூ.92.43 என்ற நிலையிலும் டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.85.75 என்ற நிலையிலும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் ஏப்ரல் 29 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version