தமிழ்நாடு

உச்சத்திற்கு சென்றது பெட்ரோல் விலை: இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப இந்த விலையேற்றம் இருந்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் 30 காசுகளுக்கு மேல் உயர்ந்து வருவதை இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் விலை 102 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.

இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.40 என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளது., இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.98.26 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

Trending

Exit mobile version