தமிழ்நாடு

29 மாவட்டங்களில் ரூ100ஐ தாண்டிய டீசல் விலை: சென்னையில் என்ன விலை?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் பெட்ரோல் விலை 104 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 100 ரூபாயை டீசல் விலை தாண்டி விட்டது என்பதும் சென்னையில் 100 ரூபாயை டீசல் விலை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி கொண்டு வரும் எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை பெட்ரோல் விலை 30 உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.61 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 99.59 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் டீசல் விலை ரூ.100ஐ நெருங்கினாலும் 29 மாவட்டங்களில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெட்ரோல் விலையும் 104 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருப்பதன் காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version