தமிழ்நாடு

103 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை: டீசலும் உயர்வு

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தினந்தோறும் 30 காசுகள் என மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் பல கோரிக்கைகள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இன்று பெட்ரோல் விலை கூடியதால் 103 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டி விட்டது என்பதும் அதே போல் 100 ரூபாயை டீசல் விலை நெருங்கிவிட்டது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும் உள்ளது/

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 103.01 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலையை 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ரூ.98.92 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version