இந்தியா

ஜெட் வேகத்தில் சென்ற பெட்ரோல், டீசல் விலை உயர்வை மின் வேகத்திற்கு மாற்றிய பட்ஜெட் அறிவிப்பு…

Published

on

பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 என்ற அளவில் வேளாண் வரியை விதிக்க மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. இதனால் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் பெட்ரோல் டீசல் விலை இனி மின்னல் வேகத்தில் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு அணையில் இந்திய  தலைநகர் டெல்லியில் லிட்டருக்கு ரூ.86-ஐ தாண்டி விற்பனை செய்து வருவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியேலே இந்த விலை என்றால் மும்பையில் கேட்கவா வேண்டும். தற்போது மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் ரூ.93 தான்.

டீசலைப் பொறுத்தவரை, டெல்லியில் விலை ரூ .76 -ஐ தாண்டியுள்ளது, அதே நேரத்தில் மும்பையில் ரூ .83 ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் டீசல் விலை விரைவில் ரூ .85 ஐ எட்டக்கூடும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசலுடன், மின்னணு பொருட்கள், மொபைல்கள் மற்றும் அவற்றின் சார்ஜர்கள், தோல் காலணிகள் போன்றவையின் விலையும் இந்த பட்ஜெட் மூலம் உயர்த்தப்பட்டுள்ளன.

வெறும் விலை உயர்வு தானா. விலை குறைவானவை எதுவும் இல்லையா என கேட்பதும் புரிகிறோது. இதோ ஆறுதலுக்காக விலை குறைந்த பொருட்களின் விவரங்கள் சில இரும்பு, எஃகு, நைலான் உடைகள், காப்பர் பொருட்கள், காப்பீடு, மின்சாரம், எஃகு பாத்திரங்கள் போன்றவை தான் அந்த ஆறுதலுக்கு காரணம்.

seithichurul

Trending

Exit mobile version