சினிமா செய்திகள்

பொங்கலுக்கு ’பேட்ட’ பராக் பராக்!

Published

on

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பேட்ட. படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், இன்று படத்தின் மூன்றாவது போஸ்டரை வெளியிட்டு பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதிசெய்தது. மூன்றாவது போஸ்டரில், இளமையான ரஜினியும், சிம்ரனும் தி.நகர் போன்ற கடை வீதியில் பூங்கொத்தை கையில் வைத்துக் கொண்டு செம்ம ஸ்டைலாக செல்கின்றனர்.

விஸ்வாசம் படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வர பொங்கலுக்கு ரஜினி – அஜித் திரை மோதல் உறுதியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version