உலகம்

அடேங்கப்பா.. பர்வேஸ் முஷாரப் சொத்து மதிப்பு இவ்வளவா?

Published

on

துபாய்க்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் கலாமானார்.

இந்நிலையில் பர்வேஸ் முஷாரப் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பாகிஸ்தானிய ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பர்வேஸ் முஷாரப்க்கு அரை டஜனுக்கும் மேலான வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் அவரது பெயரில் லண்டனில் உள்ள வங்கிக் கணக்குகளும் அடங்கும். வெளிநாடு வங்கி கிளைகளில் மட்டும் 20 மில்லியன் டாலர் பணம் வைத்துள்ளார். பாகிஸ்தான் வங்கிக் கணக்கில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வைத்துள்ளார். இவர் பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் போது 2 கோடி ரூபாய் பெற்றுள்ளார். 2022-ம் ஆண்டின் கணக்கின் படி பர்வேஸ் முஷாரப் சொத்து மதிப்பு பாகிஸ்தான் மதிப்பில் 55 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மற்றும் துபாயில் உள்ள சொத்துக்கள்

பர்வேஸ் முஷாரப்க்கு பாகிஸ்தான் தவிர லண்டன், துபாயிலும் அசையா சொத்துக்கள் உள்ளன. லண்டனில் இவருக்கு ஃபிளாட்டின் மதிப்பு மட்டும் 20 கோடி ரூபாய். அதே போன்று துபாயில் இவர் வசித்து வந்த ஃபிளாட்டின் மதிப்பும் 20 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள்

கராச்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு, மேலும் கராச்சி இராணுவ குடியிருப்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பிளாட், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் லாகூரில் ஒரு பிளாட், இஸ்லாமாபாத்தில் 7.5 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிளாட், 60 லட்சம் மதிப்பில் ஒரு பண்ணை என பாகிஸ்தானில் இவருக்கு பல்வேறு அசையும், அசையா சொத்துக்களும் உள்ளன.

பனாமா பேப்பர்ஸ் ஊழல்

பனாமா பேப்பர்ஸ் மூலமாகக் கோடிக் கணக்கான பணத்தை இவர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை இவர் வெளிநாடுகளில் பதுக்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம்

இவர் பாகிஸ்தான் பிரதமர் தேர்தலில் போட்டியிட்ட போது இவரது சொத்து மதிப்பு 62 கோடி ரூபாய் என தகவல் தெரிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் அதிபராக இருந்த காலத்தில் பல்வேறு மோசடிகள் மூலம் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக நாடு கடத்தப்பட்டு இருந்தநிலையில் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இந்தியாவிற்கு எதிரான கார்கில் போர் இவரது தூண்டுதலின் பெயரில் நடைபெற்றது. தீவிரவாதத்துக்கு ஆதரவாக இவர் இருந்தார் என பர்வேஸ் முஷாரப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version