சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தை லீக் செய்த ஊழியர் கைது..!- போலீஸார் அதிரடி

Published

on

மாஸ்டர் திரைப்படம் ஆன்லைனில் லீக் ஆக்கிய பட வேலைகளைச் செய்யும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 12-ம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால், படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பே ஆன்லைனில் மாஸ்டர் திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் துண்டு துண்டு வீடியோ பதிவுகளாக ஆன்லைனில் கசிந்தது.

முதலில் ஆன்லைன் கசிவு என்ற செய்தி புரளி எனக் கூறப்பட்ட வேளையில் தற்போது லீக் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 40 நிமிடங்கள் கொண்ட படத்தை ஆன்லைனில் லீக் செய்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாஸ்டர்  படத்துக்காக சோனி டிஜிட்டல் சினிமா சில சேவைகளை வழங்கி உள்ளது. அப்போது அந்த  நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பட வீடியோக்களை திருட்டுத் தனமாக எடுத்து சமுக வலைதளங்களில் லீக் செய்துள்ளார்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த நபர் குறித்து கண்டறியப்பட்டு உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றமும் மாஸ்டர் படத்தை ஆன்லைனில் வெளியிட தடை விதித்துள்ளது.

Trending

Exit mobile version