தமிழ்நாடு

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடத் தடையில்லை: அரசு அதிரடி அறிவிப்பு

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை என்றும் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வழிபடுமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பதும் ஒரு சிலர் தடையை மீறி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்போம் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை இல்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுடன், தனிமனித இடைவெளியை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாட வேண்டும் என்றும் அவர் புதுவை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க அனுமதி இல்லாத நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version