தமிழ்நாடு

ஜல்லிகட்டுக்கு அனுமதி- கட்டுப்பாடுகளை பின்பற்ற அரசு உத்தரவு

Published

on

வருகிற பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தம். சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உலகமே அதிரும் அளவுக்கு மாபெரும் போராட்டம் தமிழகத்தில் அரங்கேறியது. அதன் பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சூழலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி நிலவி வந்தது. ஆனால், கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் 300 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடு உத்தரவுகளை விதித்துள்ளது.

Trending

Exit mobile version