இந்தியா

அமித்ஷாவை தொடர்ந்து யோகி: மேற்கு வங்கத்தில் அனுமதி மறுப்பு!

Published

on

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மால்டா மாவட்டத்தின் வடக்கு தினஜ்பூரில் பாஜகவின் பேரணி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்த அந்த மாவட்ட நிர்வாகம் நேற்று, திடீரென யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்தது.

மால்டாவில் உள்ள ஹோட்டல் கோல்டன் பார்க்கில் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டரும் தரையிறங்கவிருந்தது. இந்த ஹெலிபேடில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஏராளமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு ஹெலிகாப்டர் மட்டுமே இங்கு தரையிறங்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் மோடியையும், பாஜகவையும் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து அவர பாஜகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுக்கு எதிராக ஒன்றுகூடியுள்ள மாநில தலைவர்களில் மம்தா மிக முக்க்கியமானர். இந்நிலையில் நேற்று மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் மம்தா பானர்ஜியின் வருகையைக் காரணம் காட்டி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version