தமிழ்நாடு

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published

on

தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து, தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்திருந்த நிலையில், இப்போது நிரந்தரத் தடை விதித்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவிலான நச்சுத்தன்மையை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் காரணத்தால், அதிக நச்சு விளைவுகள் ஏற்படுகிறது. தடை விதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆராய்வு செய்வதற்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினரைச் சேர்ந்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு, பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் தீவிரமாக ஆராய்வு செய்தது‌.

அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆராய்ந்த பின்னர், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழு, இதனை தடை செய்யப் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தரத் தடையை விதித்தது.

தடை விதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள்

வேளாண்மை பல்கலைக்கழக குழுவின் ஆராய்ச்சிக்குப் பிறகு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது..

  1. மோனோகுரோட்டோபாஸ்
  2. ப்ரோஃபெனோபாஸ்
  3. அசிபேட்
  4. ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின்
  5. குளோர்பைரிஃபோஸ் சைபர்மெத்ரின்
  6. குளோர்பைரிபாஸ்

மேற்கண்ட ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளும் தடை செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வதை தடுக்கவே, தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது‌. உண்மையில், விவசாயிகளின் நலன் காக்க வேண்டுமானால், விளைபொருட்களின் விலையை, விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும். அப்படி நடந்தால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்; அதோடு விவசாயிகளின் வருமானமும் பெருகும். அப்போது தான் விவசாயிகளுக்கு தற்கொலை என்ற எண்ணமே வராது.

seithichurul

Trending

Exit mobile version