தமிழ்நாடு

பெரியார் பிறந்த நாள் இனி சமூகநீதி நாள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Published

on

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 14ஆம் தேதி இனிய சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை திராவிட கட்சிகள் அனைத்துமே பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுக, அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் பெரியாரின் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன என்பதும் தங்கள் அரசியல் குருவாக பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக மற்றும் திமுக இடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் பெரியார் விஷயத்தில் மட்டும் இரு கட்சிகளும் ஒற்றுமையுடன் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவ்வப்போது அதிமுக மற்றும் திமுக ஆட்சி செய்யும்போது ஒருசில அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகத்தில் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்னும் 10 நாட்களில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து இந்த ஆண்டு முதலே பெரியார் பிறந்த நாளை சமூகநீதிப் நாளாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு பெரியாரின் அபிமானிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version