சினிமா

பரியேறும் பெருமாள் ஒரு இலக்கிய சினிமா: ஷங்கர் பாராட்டு!

Published

on

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு இலக்கியம் என படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

பரியேறும் பெருமாள் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில், இப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ஷங்கர் பாராட்டினார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.இப்படத்தின் ஆழம் என்னை மிகவும் நெகிழவைத்து விட்டது. படத்தில் நடித்த கதிர், ஆனந்தி,யோகிபாபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விஜய்சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த ஷங்கர் அப்படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2.0 படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கியுள்ள ஷங்கர், அடுத்து கமலுடன் இணையவுள்ள இந்தியன் 2 படத்தையும் உருவாக்கும் பணியில் பிசியாகவுள்ள ஷங்கரை, இந்த மாதம் வெளியான3 படங்கள் பார்க்கவும் வியக்கவும் வைத்துள்ளன என்பது தமிழ் சினிமாவின் பெருமை மிக்க தருணம் ஆகும்.

 

seithichurul

Trending

Exit mobile version