ஆரோக்கியம்

உதடு வெடிப்பு சரியாக அற்புதமான வைத்தியம்!

Published

on

உதடு வெடிப்பு

வெள்ளரிக்காய் , எலுமிச்சை , தர்பூசணி , கேரட் , காளிப்ளவர் , பிராக்கோலி , கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட்டு வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். மேலும் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவி வர விரைவில் உதடு வெடிப்பு நீங்கும்.

உதடு வெடிப்பு சரியாக

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காயத்தைக் குணப்படுத்தும் பண்புகள் இருப்பதால் உதடு வெடிப்பு நீங்க இதனைப் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்யில் ஈரப்பத தன்மை அதிகம் உள்ளது. உதடுகளில் தடவிவர வெடிப்புகள் மறையும்.

எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய் எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவி உலர்ந்த பின்னர் கழுவ வேண்டும்.

பால் ஆடை, பசு நெய், வெண்ணெய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதடு வறட்சி, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

அதாவது, 3-4 நாட்களுக்கு இரவு தூங்குவதற்கு முன் நெய்யை உதட்டில் தடவி வந்தால் பலன் கிடைக்கும்.

வெடித்த உதடுகளுக்கு

தண்ணீர்

கோடையில் உதட்டில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் அதிக நேரம் வெளியே வெயிலில் வேலை செய்வதாக இருந்தால், சற்று அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உதட்டின் வறட்சியைத் தவிர்க்கலாம்.

உதடு சிவப்பாக

பல் துலக்கும் முன், வெறும் ப்ரஷால் லேசான உதட்டில் வருடித்தர இறந்த செல்கள் நீங்கிச் சிவப்பாக மாறும் நண்பர்களுடன் பகிருங்கள்.

உதடுகளைச் சிவப்பாக்கச் சிறந்த வழிகள்!

உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவவும். வெள்ளரிக்காய் துண்டுகளாக வெட்டி உதட்டில் தேய்க்கவும்.

ஈரப்பதத்தைத் தொடர்ந்து தக்கவைக்கத் தேன் தடவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதினால், பிறர் பார்த்து வியக்கும் வண்ணம் உதடு சிவப்பாக மாறும். குளிர்ந்த திரவங்களைவைத்து மசாஜ் செய்யுங்கள் 2-3 முறை செய்து வந்தாலே உதடு வெடிப்பு நின்று விடும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version