தொழில்நுட்பம்
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் லீக்ஸ்.!
![moto - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/moto.bmp)
மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி சீரிஸ் வரிசையில் அடுத்த புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ நிறுவனம் இந்த வருடத்தின் இறுதியில் வெளியிட போகும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பற்றிய சில விபரங்கள் அண்மையில் வலைத்தளங்களில் கசிந்தது.
முன்னர் வெளியான தகவலின்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் வரிசையில் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பிளஸ் மற்றும் புது வேரியண்ட் ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன், நான்கு வேரியண்ட்களாக வெளியிடப்படும் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த புது மாடல் வேரியண்ட் ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.