தமிழ்நாடு

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த பேரறிவாளன்!

Published

on

30 ஆண்டுகளுக்கு மேலாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியதற்காக தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் விடுதலை ஆகியுள்ள நிலையில் அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பதும் இவரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பிய போதிலும் கவர்னர் அதை கவனத்தில் கொள்ளாமல் இருந்ததால் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது என்பது தெரிந்ததே.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்வதில் முடிவு எடுக்க கவர்னர் தாமதம் செய்ததால், தங்கள் அதிகாரத்தை வைத்து பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி தவிர பெரும்பாலான அரசியல்வாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலை குறித்த நீண்ட அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது முதல்வரை பேரறிவாளன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடனிருந்தார். தனது விடுதலைக்காக முதல்வர் எடுத்த முயற்சிகளுக்கு பேரறிவாளன் தனது நன்றியை முதல்வரிடம் நேரில் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version