சினிமா செய்திகள்

பேரன்பு ஸ்நீக் பீக் ரிலீஸ்!

Published

on

ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா நடிப்பில் உருவாகியுள்ள பேரன்பு திரைப்படம் வரும் பிப்ரவரி.,1ம் தேதி வெளியாகிறது.

ஆனந்தம் படத்திற்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து தமிழில் மம்முட்டி தனது சூப்பர்ஸ்டார் இமேஜை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, சாதாரண பாப்பாவின் அப்பா அமுதவானனாக நடித்துள்ளார்.

பல சர்வதேச விருதுகளை வென்று, பல நாடுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்ற பேரன்பு படம் தமிழ் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற பிப்ரவரி 1ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில், படத்தை புரொமோட் செய்யும் விதமாக படத்தின் ஸ்நீக் பீக் ஒன்றை நடிகர் மம்முட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

ஸ்நீக் பீக் காட்சியில், நட்சத்திரங்களை என்னும் சாதனாவால் ஒன்று, இரண்டு, மூன்றை அடுத்து நான்கு என்ற எண்ணை எண்ண முடியாமல் போகும், அதற்கு மம்முட்டி தரும் விளக்கம் அருமையான காட்சியாக உருவாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version