இந்தியா

நீரஜ் சோப்ரா பெயர் உள்ளவர்கள் எல்லோருக்கும் அடித்த அதிர்ஷ்டம்!

Published

on

சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிடைத்தது என்பதும் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் இந்தியாவிற்கு தடகளப் போட்டியில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் கிடைத்து உள்ளதை அடுத்து அந்த தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கோடிக்கணக்கான ரூபாய் பரிசு, உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இலவச விமான பயணம், உலகம் முழுவதும் தங்குவதற்கு இலவச ஆடம்பர ஹோட்டல் என நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு மட்டுமின்றி அவரது பெயரை வைத்து உள்ள அனைவருக்குமே திடீரென அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்றதை அடுத்து அவரது பெயரில் உள்ள அனைவருக்கும் ரூபாய் 501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்க குஜராத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் முன்வந்துள்ளார்.

நீரஜ் சோப்ரா என்ற பெயரில் உள்ள ஆவணத்தை காண்பித்தால் அவர்களுக்கு ரூபாய் 501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக அவரது பெட்ரோல் பங்கில் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து அந்தப் பெயரில் உள்ள குஜராத்தை சேர்ந்த அனைவருக்குமே அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version