இந்தியா

புனித் ராஜ்குமார் மரணத்தை அடுத்து மருத்துவமனைகளில் குவியும் இளைஞர்கள்: காரணம் என்ன?

Published

on

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவை அடுத்து பல இளைஞர்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் ஆரோக்கியமாக இருந்த புனித் ராஜ்குமார் அவர்கள் திடீரென இதய நோய் காரணமாக மரணம் அடைந்த சம்பவத்தை பலரும் நமக்கும் இதே போன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பெங்களூரில் உள்ள பலர் புனித் ராஜ்குமார் இறந்த அன்றும் அதற்குப் பிறகும் ஏராளமானோர் மருத்துவமனை சென்று தங்கள் இதயத்தை சோதனை செய்து வருகின்றனர் என்பதும் பலரும் முழு உடல் பரிசோதனை செய்த முற்படுகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தினமும் 1500 க்கும் மேற்பட்ட இதய நோய் சம்பந்தமான நோயாளிகள் வந்திருந்தனர் என்பதும் அவர்களில் பாதி பேருக்கு இதய நோய் இல்லை என்பது உறுதியான பின்னரும் அவர்கள் ஈசிஜி உள்பட ஒரு சில சோதனைகளை எடுக்க வலியுறுத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

புனித் ராஜ்குமார் மரணம் குறித்த செய்தி பார்த்த பிறகு ஏற்பட்ட பீதி மற்றும் வாட்ஸ் அப்பில் பரவி வரும் இதய நோய் சம்பந்தமான செய்திகள் ஆகியவற்றின் காரணமாக சிறு வலிகளை கூட புறக்கணிக்காமல் மக்கள் இதுபோன்ற சோதனைக்கு மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

புனித் ராஜ்குமார் மட்டுமின்றி ஏற்கனவே இளம்வயது பிரபலங்கள் இறந்த போதும் இதே போன்று மருத்துவமனைக்கு வந்தார்கள் என்றும் அது ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, வாரத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்றும் இருதய நோய் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version