இந்தியா

கொரோனா தடுப்பூசி குறித்த இந்த 5 வதந்திகளை நம்பாதீர்கள்..!- அரசாங்கம்

Published

on

கொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும்  மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்  வர்தனும் சில விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.

  1. கொரோனா தடுப்பூசி என்பது மற்ற உலக நாடுகளை விட இந்தியாவில் மிகவும் செயல் திறன் குறைந்ததாகத் தான் உள்ளது எனக் கூறுவது கட்டுக்கதை. உண்மையில் இந்தியாவில் வழங்கப்பட உள்ள கொரோனா தடுப்பூசி மிகவும் வீரியமும் துல்லியமும் நிறைந்தது.
  2. புதிதாக இரண்டாம் கட்டமாகப் பரவும் கொரோனாவுக்கு கோவிட்-19 க்கு என தயார் செய்த தடுப்பூசி பயன் தராது எனச் சொல்வது கட்டுக்கதை. உண்மையில், கொரோனா தடுப்பூசி புதியதாகப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்தாது என்பதற்கான எந்த ஆதரமும் கிடையாது.
  3. கொரோனா தடுப்பூசி ஒரு ஆண் அல்லது பெண்ணின் குழந்தை பிறக்க வைக்கும் திறனைக் குறைக்கும் என்பது கட்டுக்கதை. உண்மையில், அப்படி எதுவும் நடக்காது. கொரோனா தடுப்பூசி கருவுறுதலுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.
  4. கொரோனா தடுப்பூசி போட்டால் மீண்டும் காய்ச்சல் வரும் என்பது கட்டுக்கதை. உண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஊசி போட்ட வலி வரும். பொதுவாக ஊசி போட்டாலே ஒரு சிலருக்கு காய்ச்சல் வரும். அது போன்ற காய்ச்சல் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கும் வரும்.
  5. கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றியவர்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்பது இல்லை. உண்மையில் முதல் நிலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை காட்டலாம் என்றே அரசு சொல்லியது.

Trending

Exit mobile version