தமிழ்நாடு

விலை குறைந்தாலும் தக்காளி வாங்க ஆளில்லை: 30 டன்கள் வீணாக வாய்ப்பு என தகவல்

Published

on

கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து கொண்டே வந்தது என்பதும் விண்ணைத் எட்டிய தக்காளியின் விலை கிட்டத்தட்ட ரூ.200ஐ நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் வெளி மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து ஆகியவை காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்து உள்ளது.

தற்போது ஒரு கிலோ 100 ரூபாய்க்குள் தான் தற்போது தக்காளி விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தக்காளி விலை கிலோ ரூபாய் 30 முதல் 40 வரை குறைந்தாலும் தக்காளி விலை குறைவு குறித்து இன்னும் பொதுமக்கள் பலருக்கு தெரியவில்லை என்பதால் தக்காளியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

அது மட்டுமின்றி கடும் கனமழை பெய்து வருவதையடுத்து பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு செல்லவில்லை என்பதும் அதனால் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட தக்காளி விற்காமல் உள்ளதாகவும் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 35 டன்கள் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டதாகும் ஆனால் தக்காளி விலை குறைந்து இருந்தும் வாங்க ஆளில்லை என்றும், பெரும்பாலான தக்காளி அப்படியே விற்காமல் உள்ளது என்றும் கடைசி நேரத்தில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்தும் கூட தக்காளியை வாங்க ஆளில்லை என்றும் வியாபாரிகள் மிகவும் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். இதனால் சுமார் 30 டன்கள் தக்காளி வீணாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version