தமிழ்நாடு

பழனியில் ஓட்டு கேட்க வந்த அதிமுக – பாஜகவை விரட்டியடித்த மக்கள்- வீடியோ!

Published

on

ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

களத்தில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளும் சில நாட்களுக்கு முன்னர் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதால், அதைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பழனியில், வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக மற்றும் பாஜகவினரை அப்பகுதி மக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி விரட்டி அடித்துள்ளனர். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பழனியில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல இடங்களிலும் அதிமுகவினரையும் பாஜகவினரையும் விரட்டியடிப்பது குறித்தான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக, ’10 ஆண்டு காலம் ஆட்சியில இருந்து என்ன செஞ்சீங்க… இப்ப எதுக்கு இங்க வர்றீங்க’ என்று அதிமுக வேட்பாளர்களை கேள்வி கேட்கின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version