உலகம்

சாலையில் சிதறிய ஆப்பிள்கள்…உதவிக்கு வந்த மனிதநேயம்… நெகிழ்ச்சி வீடியோ….

Published

on

சாலைகளில் நடந்து செல்லும் போதோ அல்லது இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களில் செல்லும் போது சில சமயம் சில சிரமங்கள் அல்லது விபத்துக்களை சிலர் சந்திப்பதுண்டு. அப்போது யாரும் உதவிக்கு வர வில்லை எனில் அது இன்னும் கொடுமை..

அதேநேரம், சாலையில் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நபர்களுக்கு அருகில் இருக்கும் மனிதர்கள் உதவிக்கு வந்தால் அதுவே மனிதநேயத்தை பறைசாற்றும் கருவியாகும்.. இப்போதும், விபத்துக்களில் மனிதர்கள் சிக்கும் போது சக மனிதர்களே ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு சக்கர வாகனத்தில் ஏராளமான ஆப்பிள்களை எடுத்துக்கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்றிருந்த ஒரு கார் மீது மோதி ஆப்பிள்கள் சாலையெங்கும் சிதறி ஓடியது.

இதையடுத்து அந்த பக்கம் வந்த கார்களில் வந்த பலரும், நடந்து செல்பவர்களும் என சுமார் 20 பேர் 5 நிமிடங்களில் சாலையில் சிதறிய ஆப்பிள்களை பொறுக்கி அந்த நபரிடம் கொடுத்து உதவி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை 1.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 45 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version