தமிழ்நாடு

நாளை முழு ஊரடங்கு: இன்றே மீன்கள் வாங்க குவியும் பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு என்பதை அடுத்து நாளை எந்த கடைகளும் திறந்து இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றே மீன்கள் மற்றும் அசைவ பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் மீன்கள் வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளதாகவும் தனிமனித இடைவெளி இன்றி மாஸ்க் அணியாமல் பலர் மீன்களை வாங்க முண்டியடித்துக் கொண்டு இருப்பதால் கோரோனோ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு மீன் சந்தையான காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

மீன்கள் வாங்கும் பொது மக்கள் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளதால் கொரனோ வைரஸ் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீன்கள் கடைகள் மட்டுமின்றி சிக்கன் மட்டன் கறி கடைகளிலும் இதே போல் தான் பொதுமக்களின் நிலைமை உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் அரசு விதிக்கும் நடைமுறைகள் மட்டும் போதாது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version