சினிமா செய்திகள்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் இன்று!

Published

on

நடிகர் திலகமாக நடிப்பில் சிவாஜி கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் மக்கள் திலகமாக ஜனங்களின் மனங்களை பிடித்த எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் இன்று.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் என சுருக்கமாக அழைக்கப்பட்டார். கோட்டு சூட்டு போட்ட முதல் சூப்பர்ஸ்டாரும் எம்.ஜி.ஆர் தான். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும், தமிழ்நாட்டின் முடி சூடிய முதல்வராகவும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து பலருக்கு சினிமாவிலும் அரசியலிலும் எப்படி சாதிப்பது என்ற பாதையை வகுத்துக் கொடுத்தார்.

ஆனால், இன்றளவும் எம்.ஜி.ஆர் இடத்துக்கான போட்டி நிலவிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், நிரப்புவதற்குத் தான் ஆளில்லை.

திமுகவில் இருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர் அதிமுக எனும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி அரசாண்டார். இன்று எம்.ஜி.ஆரின் திருவுருவம் பதித்த நாணயத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.

அழியாப் புகழ் என்ற சொல்லுக்கு அரியாசனமாக இன்றும் என்றும் திகழ்வார் எம்.ஜி.ஆர்!

seithichurul

Trending

Exit mobile version