இந்தியா

தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலம் முழுவதும் தடை: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 5 பேருக்கு பரவியதை அடுத்து அம்மாநிலத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கர்நாடக மாநிலத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் திரையரங்குகள், மால்கள், மார்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் உள்பட 18 பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலானோர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தி உள்ளனர் என்பதும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மிகவும் குறைவானவர்கள் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸை மாநிலத்தில் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய நிலையில் அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version