இந்தியா

பட்ஜெட் 2021: 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரி அவசியமில்லை

Published

on

மத்திய பட்ஜெட் 2021ல், இன்று முக்கிய அறிவிப்பாக 75 வயதுக்கு மேற்பட்ட மூதியவர்களுக்கு வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, ‘ஓய்வூதியம் மற்றும் வட்டி ஆகியவற்றை மட்டும் நம்பியிருக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை’ என்கிற அறிவிப்பை பட்ஜெட் உரையின் போது வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதேபோல, ‘வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓய்வூதிய நிதியில் இரட்டை இலக்கு வரி விதிப்பை ரத்து செய்ய அறிவிப்பு வெளியிடுகிறேன். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ‘வரி ஹாலிடே’ மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்படி வரும் 2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வலி செலுத்த தேவை இருக்காது’ என்கிற அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version