தமிழ்நாடு

ஆறே மாதத்தில் இரண்டாவது தொழிற்சாலை.. ஆப்பிள் வருகையால் சென்னை மக்களுக்கு அதிர்ஷ்டம்..!

Published

on

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் என்ற நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு தொழிற்சாலையை அமைத்தது என்பதும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரித்து தருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 6 மாதத்தில் சென்னையில் மேலும் ஒரு ஆலையை அமைக்க பெகட்ரான் திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து அதிகாரமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் பல நாடுகளில் தங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலைகள் அதிகரித்து வருகிறது

#image_title

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் வர்த்தகப்போர் காரணமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களின் ஆலைகள் படிப்படியாக இந்தியாவுக்கு மாறி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுக்கும் பெகட்ரான் நிறுவனம் சென்னையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது முதல் தொழிற்சாலையை மகேந்திரா வேர்ல்ட் சிட்டிக்கு அருகில் அமைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் இரண்டாவது உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை தொடங்க இருப்பதாகவும் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை ஆப்பிள் மற்றும் பெகட்ரான் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை என்றாலும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் என்னைக்கு மேலும் ஒரு ஆலை வருவதால் வேலை வாய்ப்புகள் கூடும் என்பதும் மறைமுகமாக தொழில் மற்றும் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version