சினிமா

பேட்ட பராக் பராக்.. பேட்ட டீஸர் ரிலீஸ்!

Published

on

ரஜினியின் 68வது பிறந்த நாள் விருந்தாக ரசிகர்களுக்கு பேட்ட படத்தின் டீஸரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி, விஜய்சேதுபதி, நவசுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபிசிம்ஹா, உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆனால், இன்று ரஜினியின் பிறந்த நாள் என்பதால், டீஸரில் சூப்பர்ஸ்டாரை தவிர எந்தவொரு நட்சத்திரத்தையும் படக்குழு ரிவீல் செய்யவில்லை. விரைவில் டிரைலர் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பாட்ஷா, கிளிமஞ்சாரோ பாடலில் நடனமாடிய விண்டேஜ் லுக்கில் தலைவரை பார்ப்பது ஒரு தனி சுகம் தான்.

 

 

Trending

Exit mobile version