தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணி வைக்கும்: பழ கருப்பையா

Published

on

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய பாஜக அரசு உடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவிகளை பெற்று விடும் என்று மக்கள் நீதி மய்ய்ம் கட்சியில் சமீபத்தில் இணைந்த பழ கருப்பையா பேசியுள்ளார்.

கோவையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர் மேலும் கூறியதாவது: பாஜகவின் பி டீம் என்பது உண்மையிலே திமுக தான் என்றும், வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சர் பதவிகளை பெற்ற திமுக, கடைசி நேரத்தில் அங்கிருந்து வெளியேறி காங்கிரஸ் உடன் கை கோர்த்தது என்றும் கூறினார்.

தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் ஒருவேளை திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்து தங்களுடைய எம்பிகளை காண்பித்து அமைச்சர் பதவியை திமுக பெற்று விடும் என்றும் கூறினார்.

திமுக அதிமுக ஆகிய இருவரும் ஒப்பந்தம் போட்டு கொள்ளை அடிக்கின்றனர் என்றும் சாராய ஆலைகள் வைத்துள்ள 10 பேரில் 5 பேர் திமுகவினர் மற்றும் 5 பேர் அதிமுகவினர் என்றும் பழ கருப்பையா கூறினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடைக்கறி திமுகவுக்கும், எலும்புக்கறி அதிமுகவுக்கும் கிடைக்கும் என்றும் அதேபோல அதிமுக ஆட்சிக்கு வந்தால் தொடைக்கறி அதிமுகவுக்கும், எலும்புக்கறி திமுகவுக்கும் கிடைக்கும் என்றும் பழ கருப்பையா தெரிவித்தார்.

அதிமுக, திமுகவுக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் அதிரடியாக பேசுவதற்கு பழ கருப்பையா கிடைத்ததை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version