வணிகம்
விசா, மாஸ்டரை தொடர்ந்து பேஸ்புக்கை கழட்டி விட்ட பேப்பால்!
சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நீண்ட காலமாக லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரன்சியை வெளியிட உள்ளதாகக் கூறிவருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் க்ரிப்டோகரன்ஸிக்கு விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் அளித்து வந்த தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டன.
தற்போது விசா, மாஸ்டரை தொடர்ந்து பேபால் நிறுவனமும் பேஸ்புக்கிற்கு அளித்து வந்த தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளன.
பேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரன்ஸிக்கு அளித்து வந்த ஆதரவைத் தொடர்ந்து பணம் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வந்த நிறுவனங்கள் விலக்கிக் கொண்டதால் பேஸ்புக் நிறுவனம் லிப்ராவுக்கான பணிகளைத் தொடருமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வங்கிகள் க்ரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை அனுமதிக்கத் தடை விதித்துள்ளன. மறுபக்கம் உலகின் பல்வேறு முக்கிய வங்கிகள் பயன்படுத்தி வந்த விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களும் பின்வாங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.