சினிமா செய்திகள்
அமீரின் காதல்: பாவனியை எச்சரிக்கும் குடும்பத்தினர்!
பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பாவையின் உறவினர்கள் வீட்டிற்கு வந்த காட்சி முதல் புரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றனர் என்பதும் இதனால் பிக்பாஸ் வீடு சென்டிமென்ட் மழையில் நனைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றும் பாவனியின் அம்மா மற்றும் சகோதரிகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்று உள்ளன. இதில் பாவனிக்கு அவரது சகோதரி சில அறிவுரைகள் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன. குறிப்பாக எல்லோரும் உன்னிடம் நட்பாக பழகுகிறார்கள் என்றும், ஆனால் ஒருவரைத்தவிர என அமீரை பாவனியின் சகோதரி குறிப்பிடுகிறார்.
அதற்கு பாவனி, ‘இல்லை இல்லை நான் அவனிடம் நான் சீரியஸாக சொல்லி இருக்கிறேன். நான் நானாக தான் இருக்கிறேன் என பதிலளிக்கிறார். சமீபத்தில் அமீர் தனது காதலை பாவனியிடம் ஓப்பனாக தெரிவித்தார் என்பதும் அது மட்டுமின்றி அவருக்கு எதிர்பாராத வகையில் முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமீர் குறித்து பாவனியின் குடும்பத்தினர் அறிவுரை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Day81 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/2bAwgOTHPE
— Vijay Television (@vijaytelevision) December 23, 2021