உலகம்

பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள்: சைபர் செக்யூரிட்டி நிறுவனம் எச்சரிக்கை

Published

on

பாஸ்வேர்டை ஒரு சில விநாடிகளுக்குள் கணிக்க முடியும் என்றும் பாஸ்வேர்டை கணிக்க முடியாத அளவில் இருக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களுக்கு மேல் உள்ள பாஸ்வேர்டை அமைக்க வேண்டும் என சைபர் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெயில் உள்பட பல ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பாஸ்வேர்டை நாமே உருவாக்கிக் கொள்ளும் நிலை தற்போது உள்ளது. இந்த பாஸ்வேர்டை ஒரு சிலர் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எளிமையாக பாஸ்வேர்டாக உருவாக்கி வருகின்றனர்

பலர் தங்கள் பிறந்த நாள், பிறந்த வருடம், தங்களுடைய பெயர் ஆகியவை தான் பெரும்பாலான பாஸ்வேர்டுகளாக வைத்துள்ளனர். ஒருசிலர் 1234 போன்ற பாஸ்வேர்டுகளை வைத்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் எட்டு எழுத்துக்கள் குறைவான பாஸ்வேர்டு அமைக்கப்பட்டால் அதனை ஒரு சில வினாடிகளுக்குள் கணிக்க முடியும் என சைபர் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

8 எழுத்துகளுக்குள் குறுகிய பாஸ்வேர்டு வைத்து இருந்தால் உடனடியாக அதை மாற்றுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள சைபர் செக்யூரிட்டி 8 எழுத்துக்கள் இல்லாத பாஸ்வேர்டுகள் ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version