உலகம்

ஓடலைன்னா பஸ்ஸை தள்ளி பாத்துருக்கோம், விமானத்தை தள்ளி பார்த்ததுண்டா? இதோ வைரல் வீடியோ!

Published

on

பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென பழுது ஏற்பட்டால் பயணிகள் இறங்கி அந்த பேருந்தை தள்ளி விடுவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஒரு சில நாடுகளில் ரயிலை கூட தள்ளிவிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பயணிகள் இறங்கி விமானத்தை தள்ளிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நேபாள நாட்டில் உள்ள கோட்லி என்னும் பகுதியில் அமைந்துள்ள பஜூரா என்ற விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென அந்த விமானத்தின் டயர் வெடித்தது. டயர் வெடித்ததால் விமானம் ரன்வேயில் இருந்து நகர முடியாமல் அப்படியே நின்றது.

இதன் காரணமாக அந்த விமான நிலையத்தில் தரையில் இறங்கும் விமானங்கள் மற்றும் அந்த விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் விமானங்கள் ரன்வேயை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் பழுதாகி ரன்வேயில் நின்ற விமானத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடிவு செய்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தை பயணிகளின் உதவியுடன் தள்ள தொடங்கினார்கள். சுமார் இருபது பேர்களுக்கு மேல் அந்த விமானத்தை கஷ்டப்பட்டு தள்ளி ரன்வேயில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு கொண்டு சென்றார்கள். அதன் பிறகே மற்ற விமானங்கள் தரையிறங்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வீடியோவை ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்க அந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ இதோ:

 

Trending

Exit mobile version