தமிழ்நாடு

அடுத்த வைரஸ் ரெடி: அச்சமுறுத்தும் பார்கோ வைரஸ்!

Published

on

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டிருக்கிறது என்பதும் அதுமட்டுமின்றி வேலைவாய்ப்பின்றி கோடிக்கணக்கான மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தான் கொரோனா முதல் அலை முடிவடைந்து இரண்டாவது அலையும் முடிவடையும் நிலையில் உள்ளது. இருப்பினும் மூன்றாவது அல்லது நான்காவது அலை வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் உருமாறி உருமாறி பல்வேறு விதங்களில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மனிதர்களை ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் செல்லப்பிராணிகளை பார்வோ வைரஸ் என்ற வைரஸ் தாக்கி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக செல்லப் பிராணிகளான நாய்கள் இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மழைக் காலங்களில் தான் இந்த வைரஸ் மிக அதிகமாக பரவும் என்றும் குறிப்பாக ஜூன் முதல் டிசம்பர் வரையில் பார்கோ வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கடந்த காலகட்டங்களில் சென்னையில் 130 முதல் 150 காய்கள் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மனித இனமே சிக்கலில் இருந்ததால் நாய்களுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள் செலுத்தவில்லை என்பதால் இந்த ஆண்டு பார்வோ வைரஸ் மிக அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பார்வோ வைரஸ் தடுப்பூசி விலை 300க்கும் மேல் உள்ளதால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இந்த தடுப்பூசி போடாமல் உள்ளதால் மிக வேகமாக நாய்களுக்கு பார்கோ வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்லப்பிராணிகள் வைப்பவர்கள் கண்டிப்பாக பார்வோ வைரஸ் தடுப்பூசி செலுத்தி தங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version