சினிமா செய்திகள்
பார்த்திபனின் ஒத்த செருப்பு டிரைலர் ரிலீஸ்!
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடிக்கும் ஒத்த செருப்பு படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஒத்த செருப்பு படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ரா. பார்த்திபன் ஒத்தை ஆளாக படம் முழுக்க நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரே லோகேஷன் மற்றும் ஒரு நாள் இரவு நடக்கும் சம்பவமாக இந்த ஒத்த செருப்பு படம் உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஆஸ்கர் நாயகன் ரசூல் புக்குட்டி சிறப்பு ஒலியமைப்பை செய்துள்ளார்.