இந்தியா

கருக்கலைப்பு சட்டத்தில் சிறு திருத்தம்: நாடாளுமன்றம் ஒப்புதல்!

Published

on

கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் கடந்த 1971-ஆம் ஆண்டு மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் சட்டத்தை இந்தியா கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி 20 வாரங்கள் வரை இருக்கும் கருவை கலைக்கலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்கள் ஆக உயர்த்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

பெண்கள் தங்கள் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் இனப்பெருக்கம் சார்ந்தது இந்த சட்டம் என்றும், பெண்களுக்கு சுதந்திரத்தை அளிக்கும் சட்டம் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 20 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நவீன மருத்துவம் முன்னேறிவிட்டதால் 24 வாரங்கள் வரையிலும் கருக்கலைப்பு செய்வதால் தாய்க்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதே இந்த சட்டம் இயற்றப்பட்டது காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version