சினிமா செய்திகள்

பரிதாபமான நிலையில் ‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர்: என்ன நடந்தது?

Published

on

‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலின் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் பண மோசடியில் ஈடுபட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரபர்கள் உள்ளார்கள் என்பதும் அரசியல் மற்றும் நையாண்டி வீடியோக்கள் இவர்கள் பதிவு செய்து வருவார்கள் என்பதும் இவர்களுடைய வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோபி மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தனர். இந்த திரைப்படத்தை தங்கள் சொந்த காசில் தயாரிக்காமல் கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் தயாரிக்க முடிவு செய்தனர்.

கிரவுட் பண்டிங் என்பது பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து அந்த பணத்தின் மூலம் திரைப்படம் தயாரித்து அதன் பின்னர் அதில் கிடைக்கும் லாபத்தை பொதுமக்களுக்கு பகிர்ந்து கொடுப்பது என்பதுதான். இந்தியாவில் ஏற்கனவே பலர் இதுபோன்ற கிரவுட் பண்டிங் திட்டத்தின் மூலம் திரைப்படம் தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோபி மற்றும் சுதாகர் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ’மணிகம் டுடே, கோ டுமாரோ’ என்ற பெயரிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் பேக்கர் என்ற செயலி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் இந்த செயலி ‘பரிதாபங்கள்’ சேனலில் விளம்பரம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கிரவுட் ஃபண்டிங் நிதி திரட்ட பயன்படுத்திய ஒரு செயலியும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அந்த மோசடியில் கோபி மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டை அடுத்து கோபி மற்றும் சுதாகர் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தங்களிடம் விளம்பரத்துக்கு வந்த செயலி மோசடி செய்து வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் கிரவுட் ஃபண்டிங் மூலம் திரட்டப்பட்ட பணத்தின் மூலம் நிச்சயம் படம் தயாரிப்போம் என்றும் விரைவில் இந்த படத்தின் டீசர் டீசர் வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ‘பரிதாபங்கள்’ சேனல் இயக்குனராக இருந்த பாலுபோஸ் என்பவர் தான் இயக்கிய வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது என்று என்றும் தயவு செய்து அந்த வீடியோக்கள் எங்கே என கேட்ட என்னை வெறியேற்ற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பாலு போஸ் இயக்கிய வீடியோக்கள் அனைத்தும் மேற்கண்ட இரண்டு செயலிகள் செய்த முறைகேடுகள் குறித்த வீடியோக்கள் என்பதும் அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பது கோபி மற்றும் சுதாகர் மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version