தமிழ்நாடு

பெற்றோர்கள் குழந்தைகளை தைரியத்துடன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார்கள்.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த அளவிலான பாடங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலைநில் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் அடுத்தக்கட்ட நவடிக்கை குறித்தும் பேசியுள்ளார்.

அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கொரோனா தொற்று தற்போது தமிழ்நாட்டில் படிப் படியாக குறைந்து வருகிறது. ஆன போதிலும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரும் என்று சிலர் சொல்கிறார்கள்.

எனவே மருத்து வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் தான் அடுத்தது எப்போது பள்ளிகளைத் திறப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியும். குறிப்பாக, அரசு பள்ளிகளைத் திறக்கும் பட்சத்தில் பெற்றோர்களும் குழந்தைகளை தைரியத்துடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version