இந்தியா

செத்து போயிவிடுங்கள்: புகார் அளிக்க வந்த பெற்றோரை திட்டிய அமைச்சரால் பரபரப்பு

Published

on

பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவரிடம் புகார் அளிக்க வந்த பெற்றோர்களை ’செத்துப் போய் விடுங்கள்’ என அந்த அமைச்சர் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் பெறுவதாகவும், ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாமல் வருவாய் இல்லாமல் இருக்கும் தங்களிடம் வலுக்கட்டாயமாக தனியார் பள்ளிகள் கட்டணத்தை பெற்று வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் 80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் நேற்று மத்திய பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்திர சிங் என்பவரை சந்தித்து தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் அதிகமான கட்டணத்தை வலுக்கட்டாயமாக பெற்று வருகிறார்கள் என்றும் கூறினார்.

இந்த நிலையில் ஒரு பெற்றோர் அமைச்சரிடம் இதே ரீதியில் சென்றால் நாங்கள் செத்துப் போவதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியதும் ’செத்துப் போய் விடுங்கள்’ என அமைச்சர் இந்தர்சிங் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த புகார் அளித்து வந்த பெற்றோர்கள் அமைச்சரின் அலுவலகத்தில் எதிரிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, பெற்றோர்களை அவமதித்த அமைச்சர் இந்தர்சிங் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

Trending

Exit mobile version