உலகம்

கூகுள் முதல் டுவிட்டர் வரை இந்தியர்கள் தான் சி.இ.ஓ!

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூகுள் முதல் ட்விட்டர் வரை பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தான் சிஇஓவாக பதவி ஏற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இந்தியர்கள் ஐடி துறையில் முன்னேறி வருகின்றனர் என்பதும் பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓவாக இந்தியர்கள்தான் இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜேக் டார்சி பதவி விலகிய நிலையில் அதற்கான இடத்தில் இந்தியரான ப்ரக் அக்ராவல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனை அடுத்து கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் ஆகிய நிறுவனங்களில் ஏற்கனவே இந்தியர்கள் சிஇஓவாக இருந்து வரும் நிலையில் தற்போது டுவிட்டரிலும் இந்தியர்தான் சிஇஓவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மும்பையில் படித்தவர் டுவிட்டர் சி.இ.ஓ ப்ரக் அக்ராவல், அதன் பின்னர் அமெரிக்காவில் சென்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தார் என்பதும் யாகூ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற இவருக்கு தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக சி.இ.,ஓ அக உள்ளார் என்பதும் அவர் இந்தியர் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சமீபத்தில் சத்யா நாதெள்ளா தேர்வு செய்யப்பட்டார் என்பதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் மணிபால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் படித்து 2014 ஆம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.

அதேபோல் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் இன் சிஇஓவாக அரவிந்த் கிருஷ்ணா என்பவர் இருந்து வருகிறார் என்பதும் அமெரிக்க வணிக நிர்வாகியான இவர் ஏற்கனவே பல நிறுவனங்களில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் டிசைனர்களால் வரவேற்கப்படும் அடோப் நிறுவனத்தின் சிஇஓவாக சாந்தனு நாராயணன் என்ற இந்தியர் உள்ளார் என்பதும் பெங்களூரைச் சேர்ந்த இவர் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து தற்போது அமெரிக்காவில் உள்ள அடோப் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களில் இந்தியர்கள் சிஇஓவாக இருப்பது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version