சினிமா செய்திகள்

ஏன் சுழலி இப்படி பண்ணிட்டீங்க?

Published

on

பிரேமம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் நாயகியாக நடித்து, ஏய் சுழலி அழகி என தமிழ் ரசிகர்களை தனது கூந்தல் அழகால் வசீகரித்து கட்டிப்போட்ட அனுபமா எடுத்த இந்த திடீர் முடிவை அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கவில்லை.

தன்னுடைய ஸ்டைலை மாற்ற வேண்டும் என நினைத்த அனுபமா தனது சுருள் முடியை சில நாட்களுக்கு முன்னர்தான் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது, அவரது பாதி கூந்தலை கத்தரித்து, பாப் கட்டிங் அனுபமாவாக மாறியுள்ளார்.

இந்த ஹேர்ஸ்டைலில் அனுபமா அழகாகக் தான் உள்ளார் என அவரது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் சிலர் தெரிவித்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் ஏன் சுழலி இப்படி பண்ணிட்டீங்களே? என கவலையுடன் கமெண்ட் செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version