தமிழ்நாடு

எங்கிருந்தாலும் வாழ்க: தேமுதிகவுக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக அமைச்சர்!

Published

on

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக சமீபத்தில் விலகிய நிலையில் தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவிப்பு செய்தது. மேலும் தற்போதைய நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் அதிமுகவுக்கு அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் இன்று அளித்த பேட்டி ஒன்றில், ‘தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுகவுக்கு வருவதற்கு முன்பாக அமைச்சர் பாண்டியராஜன் தேமுதிகவில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version