சினிமா

பாண்டவர் அணி தொடர்ந்து வெற்றி முகம்: மீண்டும் விஷால் கையில் நடிகர் சங்கம்!

Published

on

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்திலிருந்தே நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி முகமாக உள்ளது என்பதும் கே பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், மற்றும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகியோர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சற்று முன் வெளியான தகவலின்படி இதுவரை பெற்றுள்ள வாக்குகளின் விபரங்கள் பின்வருமாறு:

தலைவர் பதவி:

நாசர் – 640 வாக்குகள்
கே.பாக்யராஜ் – 480

பொதுச்செயலாளர் பதவி:

விஷால் – 782
ஐசரி கணேஷ் – 597

பொருளாளர் பதவி:

கார்த்தி – 1009
பிரசாந்த் – 568

துணைத்தலைவர்கள் பதவி:

கருணாஸ் – 480
பூச்சி முருகன் – 490

குட்டி பத்மினி 404
உதயா – 329

இதனையடுத்து மீண்டும் விஷால் அணியின் கைக்கே நடிகர் சங்கம் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version