வணிகம்

அதிர்ச்சி.. பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பை செய்யவில்லையா? அபராதம் எவ்வளவு தெரியுமா?

Published

on

மார்ச் 31-ம் தேதிக்குள் இணக்கவில்லை என்றால் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறையிடமிருந்து செய்து சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பைச் செய்யவில்லை என்றால், பான் கார்டு செயல்படாத நிலைக்கு தள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அபாரதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பைச் செய்யவில்லை என்றால் வருமான வரி சட்டப்பிரிவு 27பி கீழ் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்த இணைப்பைச் செய்யாமல் வங்கி கணக்கு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற வரி சம்பந்தம் இல்லாத சேவைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தும் போது அபராதம் கிடையாது.

அதேநேரம் வங்கி கணக்கில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் போது அல்லது எடுக்கும் போது பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பு கட்டாயம். இல்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே முடிந்தவரையில் பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பை விரைவில் செய்துவிடுவது நல்லது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

seithichurul

Trending

Exit mobile version