இந்தியா

ஆதார்-பான் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

Published

on

ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என பங்கு சந்தை ஒழுங்கு ஆணையமான செபி எச்சரித்து இருந்த நிலையில் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு ஆன்லைன் மூலம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஆதார் மற்றும் பான் கார்டை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை காலக்கெடு விதித்திருந்தது என்பது தெரிந்தது. இந்த காலக்கெடு முடிய இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் விறுவிறுப்பாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அரசு, அதற்கு மேல் காலக்கெடு வழங்கப்படமாட்டாது என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனவே ஆதார் மற்றும் பான் கார்டு இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Trending

Exit mobile version