சினிமா செய்திகள்

5வது முறையாக விவாகரத்து செய்த பிரபல நடிகை: ஒரே ஆண்டில் இரு திருமணம்!

Published

on

ஒரே ஆண்டில் இரண்டு திருமணம் செய்த பிரபல நடிகை ஒருவர் தான் திருமணம் செய்து கொண்ட ஐந்து கணவர்களையும் அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது

‘பே வாட்ச்’ உட்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பமீலா ஆண்டர்சன். இவர் கடந்த 2006, 2007, 2014 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து மூன்று பெண்க ளைத் திருமணம் செய்தார். இதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸ் என்பவரை நான்காவது முறையாக திருமணம் செய்தார். ஆனால் இந்த திருமணம் 12 நாட்களில் முடிவுக்கு வந்ததை அடுத்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்

அதன் பிறகு மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தனது பாதுகாவலரை திருமணம் செய்தார். 5-வது முறையாக நடந்த இந்த திருமணம் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் தற்போது இதுவும் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது 5வது கணவரையும் அவர் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்

இந்த நிலையில் தாயாரின் விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்து பமீலாவின் மகன்கள் இனிமேல் எங்கள் அம்மா எங்களுடனே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் நாங்களும் அவருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். 54 வயதாகும் பமிலா இனிமேல் திருமணம் செய்யப்போவதில்லை என்றும் தனது குழந்தைகளுடன் எஞ்சிய நாட்களை கழிக்க போவதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version