தமிழ்நாடு

தினகரனுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி: தங்க தமிழ்செல்வனை தொடர்ந்து மேலும் ஒரு முக்கிய தலை!

Published

on

மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியை சந்தித்ததையடுத்து அதிமுகவில் பல அமமுகவினர் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தங்க தமிழ்செல்வனுக்கும் தினகரனுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

அதிருப்தியில் உள்ள தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், அங்கு அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மறப்பதற்குள் மேலும் ஒரு முக்கிய அமமுக தலைவர் அதிமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவருமான பழனியப்பன் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று தகவல்கள் வருகின்றன. அமைச்சர் வேலுமணி மூலம் பழனியப்பனை இந்த பக்கம் இழுக்க எடப்பாடி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து அமமுகவில் இருந்து பலர் விலகுவதால் தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version